வெட்கமே இல்லாமல் எப்படி தஞ்சை கோவிலுக்கு போனிங்க: சீமானுக்கு நடிகை கேள்வி

வெட்கமே இல்லாமல் எப்படி தஞ்சை கோவிலுக்கு போனிங்க: சீமானுக்கு நடிகை கேள்வி

சமீபத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டு வந்தார்

இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தற்பொழுது கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த வீடியோவில், “வாழ்த்துக்கள் படத்தின் படப்பிடிப்பின்போது கடவுள் மறுப்புக் கொள்கையை கடைப்பிடித்த சீமான், திருநீர் பட்டை பூசியதற்காக தன்னையும், தன்னுடைய தாயையும் கேலி செய்ததாகவும், தற்போது அவரே பட்டை அடித்து கொண்டு கோவிலுக்கு சென்று வந்தது அசிங்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தன்னை யார் என்றே தெரியாது என்று சொன்ன சீமான், ‘அவர் பெற்ற மகன் மீது சத்தியம் செய்து விஜயலட்சுமியை தெரியாது என்று அவரால் சொல்ல முடியுமா.? என்று அவர் சவால் விடுத்து இருக்கிறார்.

பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு ஏன் கோவிலுக்கு செல்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கமே இல்லையா/ இப்படிபட்ட பாவியை ஏன் சிவலிங்கம் முன் நிற்க அனுமதித்தீர்கள்? ரஜினி இமயமலை சென்றபோது நக்கலடித்துவிட்டு இப்போது நீங்கள் மட்டும் ஏன் சிவன் கோவிலுக்கு சென்றீர்கள்?

பொய்யான வேசம் போடுவதை இத்தோடு சீமான் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் நடிகை விஜயலட்சுமி எச்சரிக்கை செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply