வெங்காய லாரி விபத்து: டிரைவரை காப்பாற்றாமல் வெங்காயத்தை பொறுக்கிய பொதுமக்கள்

வெங்காய லாரி விபத்து: டிரைவரை காப்பாற்றாமல் வெங்காயத்தை பொறுக்கிய பொதுமக்கள்

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்துக்குள்ளான லாரி ஒன்றின் ஓட்டுனர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அந்த ஓட்டுநரை காப்பாற்றாமல் அந்த பகுதியின் பொதுமக்கள் லாரியில் இருந்து கிழே சிதறிக்கிடட்ந்ஹ வெங்காயங்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்காயங்களை ஏற்றிச் சென்ற லாரி மும்பை – புனே விரைவுச் சாலையில் லோனாவாலா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

அப்போது அந்த வழியாகச் சென்ற பிற வாகன ஓட்டுநர்களும், மக்களும் லாரி ஓட்டுநரை காப்பாற்ற முயற்சிக்காமல், வெங்காயங்களை எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டினர்.

Leave a Reply