வெங்கட்பிரபு தாய் மறைவுக்கு சிம்பு இரங்கல்!

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவியும் வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர்களின் தாயாருமான மணிமேகலை மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பு இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உள்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள்.

கடந்த இரண்டு வருடமாக இதற்குமுன் நட்பாக இணைந்திருந்தாலும் இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகான எளிமையாக எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் என பார்த்திருக்கிறேன்

ஆனால் அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு, இதை கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு.

அப்பாவிற்கும் குடும்பத்திற்கும் உங்கள் அனைவருடனும் இழப்பையும் வேதனையையும் பகிர்ந்து கொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply