shadow

வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?

1இரண்டு நடைமுறைகள் வைத்திருக்கிறோம். ஒன்று கோயிலுக்குச் சென்று வழிபடுவது. மற்றொன்று வீட்டிலேயே வணங்கு வது. கோயிலில் இருக்கும் ஸ்வாமி, மருந்து வைத்து நிரந்தரமாகப் பிரதிஷ்டை பண்ணப்பட்டது. இதற்கு அசரம் என்று பெயர். வீட்டில் இருப்பதை எங்கேயும் எடுத்துப் போகலாம்.

இதற்கு சரம் என்று பெயர். வீட்டில் பஞ்சாயதன பூஜை என்று வைத்திருக் கிறோம். ஆதித்யம், அம்பிகாம், விஷ்ணும், கணநாதம், மகேஸ்வரம் என்பார்கள். சூரியன், அம்பாள், நாராயணன், பிள்ளையார், மகாதேவன் ஆகிய ஐந்து உருவங்களை வணங்குவது பஞ்சாயதன பூஜை. விஷ்ணுவுக்கு சாளக்ராமம். சிவனுக்கு பாணம் என்று வைப்போம். இந்த ஐந்து பேரையும் வீட்டில் வைத்து அபிஷேகம் செய்வித்து வழிபடுவது பாரதிய கலாசாரம்.

இதில் சிவனிடம் அதிக ப்ரீதி இருந்தால், லிங்கத்தை நடுவில் வைத்து மற்றவற்றை நாற்புறங்களிலும் வைப்பார்கள். விஷ்ணு மேல் ப்ரீதி அதிகம் என்பவர்கள், சாளக்ராமத்தை நடுவில் வைத்து மற்றவற்றை நாலு பக்கங்களிலும் வைத்து வணங்குவர். பாகுபாடு ஏதும் இல்லை. இந்த முறையில் சிவலிங்கத்தைப் பூஜை செய்வது அவசியம். சாளக்ராம வழிபாடும் அவசியம்.

Leave a Reply