வீட்டின் விலை வெறும் 76 ரூபாய்:

என்ன காரணம் ஆச்சரிய தகவல்

ஒரு வீட்டின் விலை குறைந்தது 30 லட்சம் முதல் 1 கோடிக்கு மேல் இருக்கும் நிலையில் பெரும் 76 ரூபாய்க்கு வீடு விற்கப்படுவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இத்தாலி நாட்டிலுள்ள கலப்ரியா என்ற மாகாணத்தில் ஒரு வீட்டின் விலை ஒரு டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 76ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறிய போது ’இந்தத் திட்டத்தின்படி ஒரு வீட்டின் விலை ஒரு டாலர் என்று இருந்தாலும் வீட்டை வாங்குபவர்கள் அதனை புதுப்பிக்கும் வரை ஆண்டுக்கு 250 டாலர் பாலிசி கட்டணம் கட்டவேண்டும் என்றும் மூன்று ஆண்டுகளுக்குள் பாலிசி தொகை கட்டாவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு 17 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

எனவே ஒரு வீட்டின் டாலர் 76 ரூபாயாக இருந்தாலும் அதன் பாலிசி கட்டணம் அதிகமாக இருப்பதால் வீட்டின் விலை குறைவு என்று நம்பி வாங்கியவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஆக உள்ளது

Leave a Reply

Your email address will not be published.