வீடு வீடாக உடனே செல்லுங்கள்: மத்திய அரசை விளாசிய மும்பை ஐகோர்ட்!

வீடு வீடாக உடனே சென்று தடுப்பூசி வழங்குங்கள் என மத்திய அரசுக்கு மும்பை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

வெளிநாடுகளில் எல்லாம் வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் நீண்ட வரிசையில் நின்று முதியவர்கள் உள்பட பலர் தடுப்பூசிகள் வாங்க வரிசையில் நிற்கின்றனர் இந்த அவல நிலை உடனடியாக மாற வேண்டும்

மத்திய அரசு முன்பே வீடு வீடாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் பல முதியவர்கள் பிரபலமானவர்களை காப்பாற்றியிருக்கலாம். இனியும் தாமதிக்காமல் உடனடியாக வெளிநாட்டில் செய்வதுபோல் வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்க வேண்டும்

இது குறித்து ஏற்கனவே மத்திய அரசிடம் விளக்கம் கேட்டும் இன்னும் பதில் அளிக்கவில்லை. எனவே வரும் 19ஆம் தேதி மத்திய அரசு எங்களிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மும்பை நீதிமன்றம் மத்திய அரசை விளாசி உள்ளது

வீடு வீடாக சென்று தடுப்பூசி கொடுப்பது மட்டுமின்றி சாலைகள் உள்ளது பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்களுக்கும் எப்படி தடுப்பூசி கொடுக்கப்படும் என்பதற்கான திட்டங்களையும் மத்திய அரசு வகுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது