விஸ்வாசம்’ படத்திற்கு யுனிவர்சல் சான்றிதழ் கொடுத்த சென்சார்

விஸ்வாசம்’ படத்திற்கு யுனிவர்சல் சான்றிதழ் கொடுத்த சென்சார்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை இன்று காலை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் உள்ள எந்தவித காட்சிகளையும் சென்சார் அதிகாரிகள் கட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘யூ’ சான்றிதழ் கிடைத்ததை ‘யூனிவர்சல் சான்றிதழ் கிடைத்துள்ளதாக சத்யஜோதி நிறுவனம் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது.

விஸ்வாசம்’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்த செய்தி வெளியான அடுத்த நிமிடமே டுவிட்டரில் இதுகுறித்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதையே அஜித் ரசிகர்கள் ஒரு கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறது. டுவிட்டரில் விஸ்வாசம் சென்சார் குறித்த ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

 

Leave a Reply