‘விஸ்வாசம்’ படத்தின் ஒருவருட கொண்டாட்டம்: டிரண்ட் ஆக்கிய அஜித் ரசிகர்கள்

‘விஸ்வாசம்’ படத்தின் ஒருவருட கொண்டாட்டம்: டிரண்ட் ஆக்கிய அஜித் ரசிகர்கள்

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம், இரண்டு வருடம், ஐந்து வருடம், பத்து வருடம் ஆகியதை கொண்டாடி வரும் வழக்கம் தற்போது சினிமா ரசிகர்களிடையே டிரண்ட் ஆகியுள்ளது. ஆனால் ரிலீஸ் ஆகும் முன்னரே ஒரு படத்தின் ஒருவருட கொண்டாட்டம் இன்று அஜித் ரசிகர்களிடையே நடைபெற்று வருகிறது.

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வருடம் இதே நாளில் தான் அறிவிக்கப்பட்டது. எனவே ‘விஸ்வாசம்’ படத்தின் ஒருவருட அறிவிப்பை இன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு இதனை சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கியும் வருகின்றனர்.

வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள விஸ்வாசம்’ படத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Leave a Reply