விஸ்வாசம்’ டீசர் வெளியாகும் தேதி!..

விஸ்வாசம்’ டீசர் வெளியாகும் தேதி!..

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம் வரும் பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்ற கேள்விக்கு சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் இயக்குனர் சிவா கூறியுள்ளார்.

அந்த விருது விழாவில் கலந்துகொண்ட விஸ்வாசம் திரைப்படத்தின் இயக்குனர் சிவா, “பத்து நாட்களுக்குள் படத்தின் டீசரை எதிர்பார்க்கலாம்” எனக் கூறியிருக்கிறார். எனவே, பத்து நாட்களுக்குள்ளாக வர இருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகவே விஸ்வாசம் திரைப்பட டீசரை எதிர்பார்க்கலாம் என்ற முடிவில் அஜித் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Leave a Reply