விஷாலை அடுத்து சிம்புவுடன் மோதும் அர்ஜூன்

விஷாலை அடுத்து சிம்புவுடன் மோதும் அர்ஜூன்

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து நல்ல விமர்சனத்தை பெற்ற அர்ஜுன், தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘கொலைகாரன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படத்தில் அர்ஜூன் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் அர்ஜூன் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

வெங்கட்பிரபு இயக்கவுள்ள மாநாடு படத்தில்தான் அர்ஜூன் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் சிம்புவும் அர்ஜுனும் மோதும் ஆக்சன் காட்சி ஒன்று அதிரடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்கும் என்றும், இந்த படத்திற்காக சிம்பு பயிற்சி எடுக்க வெளிநாடு செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

 

Leave a Reply