shadow

விஷாலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விஷாலுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

வாழ்த்துகள். நீங்கள் அரசியலில் நுழைவது இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். டெல்லி வரும் போது நிச்சயம் வாருங்கள் நேரில் பார்ப்போம்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் ‘மாற்றம் தவிர்க்க முடியாதது. அத்துடன் நம் நாடு ஒரு உலகளாவிய அதிகார மையமாக மாற்றுவதற்கு இளைஞர்கள் அரசியலில் சேர வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அதற்கு இளைஞர்களே எதிர்காலம் என்பதை குறிக்கும் விதமாக #YoungstersAreTheFuture என்ற ஹேஷ்டாக்கை அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்தியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் டுவீட்டுக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்த சிலமணி நேரங்களில் விஷாலின் வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply