விவேக்கிற்கு மரியாதை செலுத்தி படப்பிடிப்பை தொடங்கிய உதயநிதி!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக சமீபத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக் அவர்களுக்கு மரியாதை செலுத்தி படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் #Article15 பட தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். மறைந்த அண்ணன் விவேக் அவர்களின் திருவுருவப்படத்துக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மரியாதை செய்தோம். சமூக மாற்றத்துக்காகவும் சுற்றுச்சூழலை காக்கவும் குரல் கொடுத்த அண்ணனின் வழி நடப்போம்.

இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் சகோதரர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டோம். தயாரிப்பாளர் போனிகபூர் சாருக்கு நன்றி.

Leave a Reply