விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயங்கும் டிராக்டர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

சென்னை, வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்காக குறைந்த வாடகையில் இயங்கும் டிராக்டர்கள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதனை சென்னை தலைமை செயலகத்தில் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்,குறைந்த வாடகையில் டிராக்டர் வழங்கும் திட்டத்திற்காக வேளாண் துறைக்கு 50 டிராக்டர்களை வழங்கினார் .

மேலும் ரூ.22.34 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் கருவிகள் ,ரோட்டவெட்டர்கள், 185 கொத்துக்கலப்பைகள் ஆகியவற்றை வேளாண் துறைக்கு அவர் வழங்கினார்.