விளாத்திக்குளம் இடைத்தேர்தல்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுயேச்சையாக போட்டி

விளாத்திக்குளம் இடைத்தேர்தல்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுயேச்சையாக போட்டி

விளாத்திக்குளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு தராததால் அதிருப்தி அடைந்த மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக சின்னச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளாத்திகுளம் இடைத்தேர்தலில் ஏற்கனவே பலமுனை போட்டிகளால் வெற்றி யாருக்கு என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் ஓட்டுக்களை மார்க்கண்டேயன் பிரிப்பதால் அதிமுகவுக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

மேலும் விளாத்திகுளம் தொகுதி தூத்துகுடி பாராளுமன்ற தொகுதியுடன் வருகிறது. எனவே கனிமொழியின் தீவிர் பிரச்சாரம் இந்த தொகுதியில் அதிமுகவுக்கு பாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply