விலைவாசி உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி-ராகுல் காந்தி கைது

புதுடெல்லி:

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனு கொடுக்க குவிந்தனர். பிரதமர் மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்துக்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவானது.

போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டனர்