shadow

விராத்கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமணம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் இன்னும் ஒருசில நாட்களில் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிய வந்துள்ளது. இதற்காகவே அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டி தொடரில் விளையாடவில்லை

இந்த நிலையில் விராத் கோஹ்லியின் திருமணம் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான அடிலெய்டு ஓவல் மைதானத்தின் நி்ர்வாகம், விராட் கோலியை இந்த மைதானத்தில் வைத்து திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அடிலெய்டு ஓவல் மைதான சிஇஓ ஆன்ட்ரிவ் டேனியல்ஸ், ‘‘விராட் கோலி – அனுஷ்கா திருமணம் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றால் அது எங்களுக்கு த்ரில்லாக இருக்கும். அடிலெய்டு மைதானத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலிக்கு, இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அதிக மகிழ்ச்சியான நினைவுகளை கொடுக்கும்’’ என்றார்.

அடிலெய்டு ஓவல் மைதான சிஇஓ ஆன்ட்ரிவ் டேனியல்ஸ் கோரிக்கையை விராத் கோஹ்லி ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply