shadow

வியட்நாம் நாட்டில் வரலாறு காணாத புயல்-வெள்ளம்: 60 பேர் பலி, 1 லட்சம் வீடுகள் சேதம்

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவது தெரிந்ததே. ஆனால் தமிழகத்தை விட பலமடங்கு வியட்நாம் நாட்டில் பெய்த மழை காரணமாக சுமார் 60 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் வீடுகளுக்கும் மேல் சேதமடைந்துள்ளதால் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

வியாட்நாமின் மத்திய மற்றும் தென் பகுதியில் வீசிய டேம்ரா சூறாவளியால் மணிக்கு 90 கி.மீ. வரை பலமாக காற்று வீசியது. டேம்ரா சூறாவளியால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் அந்நாட்டு மீட்புப்பணி வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பெரும்பாலான இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 30,000 மக்கள் அவர்களது பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்

 

Leave a Reply