விப்ரோ நிறுவனத்தலைவர் அசிம் பிரேம்ஜி பதவி விலகுகிறாரா?

நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தை சுமார் அரை நூற்றாண்டாக வழிநடத்திய அசிம் பிரேம்ஜி தனது செயல் தலைவர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் விப்ரோ நிறுவனத்தில் தலைமை வியூக அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிலும் உள்ள அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷத் பிரேம்ஜி புதிய செயல் தலைவராகப் பொறுப்பேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல் தலைவர் பதவியிலிருந்து அசிம் பிரேம்ஜி விலகினாலும் கவுரவ தலைவராக தொடர்வார் என விப்ரோ அறிவித்துள்ளது.

Leave a Reply