விபத்து நடந்ததே தெரியாமல் உயிரிழந்த 20 பேர்: பேருந்து விபத்தில் தப்பியவர் பேட்டி

விபத்து நடந்ததே தெரியாமல் உயிரிழந்த 20 பேர்: பேருந்து விபத்தில் தப்பியவர் பேட்டி

கேரள மாநிலத்தில் சொகுசு பேருந்து ஒன்று 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது அவிநாசி அருகே இன்று அதிகாலை கண்டெய்னர் ஒன்றில் பயங்கரமாக மோதிய விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

இந்த விபத்தில் பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில் ஓரிருவர் மட்டுமே காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். இதில் காயமின்றி உயிர் தப்பிய ஒருவர் அளித்த பேட்டியில் ’இந்த விபத்து ஒரு நொடியில் எதிர்பாராத விதமாக நடந்து விட்டது என்றும் விபத்து நடந்ததே தெரியாமல் பலர் கணப்பொழுதில் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தார்

மேலும் இந்த விபத்து கண்டெய்னர் லாரி டிரைவர் தூங்கியதுதான் காரணம் என்றும் அவர் கண் அயர்ந்ததால்தான் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது இதனை அடுத்து கண்டெய்னர் லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.