விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ட ஹெச்.ராஜா

விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ட ஹெச்.ராஜா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் விபத்தில் காயம் அடைந்தவர்களை ஹெச். ராஜா மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அந்த பகுதியினர்களை திருப்தி அடைய செய்துள்ளது.

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் ஒன்று காரைக்குடி, சங்கராபுரம் சங்கன் திடல் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட மூவர் படுகாயம் அடைந்தனர். அப்போது இந்த
வழியாக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று கொண்டிருந்த சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்க உதவி சிகிச்சைக்காக தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply