விடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை!

விடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை!

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் அதன்படியே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது மட்டுமின்றி விடிந்த பின்னரும் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னை- கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகரிலும் கனமழை கொட்டியது.

Leave a Reply