விஜய் 65 படத்தின் டைட்டில் அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டிலை சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த டைட்டிலை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு மற்.றும் விடிவி கணேஷ் ஆகிய இரண்டு காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர் என்பதும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த படம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்