விஜய் வீட்டில் பறிமுதல் செய்த ஆவணங்கள்: வருமான வரித்துறை அதிரடி

விஜய் வீட்டில் பறிமுதல் செய்த ஆவணங்கள்: வருமான வரித்துறை அதிரடி

நடிகர் விஜய் வீட்டில், சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ஒருசில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆவணங்கள், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தற்போது வருமான வரித்துறையிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

விஜய் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மட்டுமின்றி மதுரையில், அன்புச்செழியனின் வீடு, அலுவலகம் மற்றும் நண்பரின் வீடு ஆகிய இடங்களில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். அதேபோல் ஏஜிஎஸ் குழுமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும், அமலாக்கத் துறையிடம் ஒப்படைத்து இருப்பதாகவும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய முடிவு அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply