விஜய் வீடு உள்ள சாலையில் செல்பவர்களிடமும் விசாரணை: சென்னையில் பரபரப்பு

விஜய் வீடு உள்ள சாலையில் செல்பவர்களிடமும் விசாரணை: சென்னையில் பரபரப்பு

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீடு, சென்னை அருகே உள்ள நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இன்னொரு வீடு பனையூரில் உள்ள பண்ணை வீடு ஆகியவற்றின் வழியாக செல்பவர்கள் விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என போலீசாரிடம் இருந்து தகவல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் பனையூர் வீட்டில் வைத்து 15 மணி நேரத்திற்கு மேலாக நடிகர் விஜய்யிடம் வருமானவரித் துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

விஜய்யிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் வருமான வரித்துறையினர் எடுக்க உள்ள அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து தமிழகமே காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply