விஜய் ரசிகர்களுக்கு ஒரே ஒரு கேள்வி?

விஜய் ரசிகர்களுக்கு ஒரே ஒரு கேள்வி?

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியான 5 மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்ஸ் கிடைத்துவிட்டது என்றும், அதற்கு பின்னர் எத்தனை மணி நேரத்தில் எவ்வளவு லைக்ஸ்கள் கிடைத்தது என்றும் விலாவரியாக விஜய் ரசிகர்கள் டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

பொதுவான ரசிகர்கள் சர்கார் டீசரை பார்த்திருந்தாலும் லைக்ஸ் போடும் விருப்பமுள்ளவர்களா? என்பது தெரியாது. ஒருசிலர் லைக்ஸ் போட்டிருந்தாலும் பெரும்பாலான லைக்ஸ்கள் விஜய் ரசிகர்கள் மட்டுமே போட்டிருப்பார்கள். மேலும் லைக்ஸ் போட்ட விஜய் ரசிகர்கள் அனைவரும் நிச்சயம் டுவிட்டரிலும் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு

அப்படியென்றால் சர்கார் டீசருக்கு லைக்ஸ் போட்ட விஜய் ரசிகர்களான மில்லியன் கணக்கானோர் ஏன், விஜய்யின் டுவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்யவில்லை. அவருடைய டுவிட்டர் பக்கத்தில் 1.74 மில்லியன் மட்டுமே ஃபாலோயர்கள் உள்ளனர். மீதி கோடிக்கணக்கான டுவிட்டரில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏன் அவருடைய பக்கத்தை ஃபாலோ செய்யவில்லை? என்பதே நமது கேள்வி

Leave a Reply