விஜய் முடிந்தால் வழக்கு தொடரட்டும்: சுப்பிரமணியன் சுவாமி

விஜய் முடிந்தால் வழக்கு தொடரட்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பிகில் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் சமீபத்தில் வருமான வரித் துறையினர் ரெய்டு செய்த நிலையில் அந்த படத்திற்கு பைனான்ஸ் கொடுத்தவர் வீட்டிலும் அந்த படத்தில் நடித்த விஜய் வீட்டிலும் ரெய்டு நடந்தது என்பது தெரிந்ததே

இந்த வீட்டிலும் மூலம் விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மற்றும் கணக்கில் வராத சுமார் 300 கோடி ரூபாய் கண்டுபிடிப்பு ஆகியவை செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழைத்து வந்து விசாரணை செய்தது தவறு என அரசியல்வாதிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் கூறியதாவது: படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால் விஜய் வழக்கு தொடரலாம். இதுகுறித்து அவர் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வழக்கு தொடரலாம். ஒன்றும் இல்லையென்றால் விஜய் ஏன் கவலைப்பட வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

Leave a Reply