தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான டி இமான் தற்போது அஜித் நடித்த விசுவாசம் என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய விருதை பெற்றுள்ளார்

சமீபத்தில் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி இமான் அவர்களுக்கு கிடைத்தது

அஜித் நடித்த விசுவாசம் திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்த அவருக்கு இந்த விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டி இமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி விஜய் படத்தில் அறிமுகமாகி அஜித் படத்தில் விருது பெற்றது பெருமை என்று கூறியுள்ளார். மேலும் ரஜினி அஜித் விஜய் ஆகியோர் தங்களை தன்னை தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply