விஜய் இல்லாமலே நடக்கும் தளபதி 64 படப்பிடிப்பு! காரணம் என்ன?

விஜய் நடித்துவரும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னை திரும்பியதாகவும் அதனை அடுத்து அவர் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை கொண்டாட லண்டன் சென்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஷிமோகாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பிலிருந்து விஜய் சென்றாலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் விஜய் சேதுபதி கர்நாடக மாநிலத்திற்கு சென்று படக்குழுவினர்களுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

10 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நாடு திரும்பும் விஜய், அதன் பின்னர் சென்னையில் நடைபெறும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது

Leave a Reply