shadow

விஜய்யுடன் டான்ஸ் ஆட விடிய விடிய பயிற்சி எடுத்தேன். காஜல் அகர்வால்

விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராகிய காஜல் அகர்வால், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

விஜய்யுடன் ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா படத்தில் ஆடியிருந்தாலும் அவர் ஒரு நல்ல டான்சர் என்பதால் அவருடன் ஆடுவது சவாலான விஷயம் என்று காஜல் கூறினார்

எனவே கஷ்டமான சில ஸ்டெப்ஸ்களை நடன இயக்குனரிடம் முன்பே கேட்டு தெரிந்து கொண்டு வீட்டில் விடிய விடிய பயிற்சி செய்து பின்னர் விஜய்யுடன் ஆடியதாகவும், அப்படி ஆடியதால் தான் அந்த ஷாட்டுகள் ஒரே டேக்கில் ஓகே செய்யப்பட்டது என்றும் காஜல் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *