விஜய்யின் பிகில் படத்தை முந்திய தனுஷின் அசுரன்

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவிருக்கும் நிலையில் அதே நாளில் தனுஷின் அசுரன் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டது

ஆனால் சற்றுமுன் ‘அசுரன்’ திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து விஜய்யின் பிகில் படத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அசுரன் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் அசுரன்’ படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leave a Reply