விஜய்யிடம் இருந்து திடீரென விலகிய விஜய்சேதுபதி! காரணம் என்ன?

விஜய்யிடம் இருந்து திடீரென விலகிய விஜய்சேதுபதி! காரணம் என்ன?

விஜய் நடித்த பிகில், விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன், மற்றும் கார்த்தி நடித்த ’கைதி’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளி போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த படம் வரும் நவம்பர் மாதம் எட்டாம் தேதி அல்லது 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது

விஜய், விஜய்சேதுபதி ஆகிய இருவரும் அடுத்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளதை அடுத்து இந்த போட்டியை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் சங்கத்தமிழன் படத்தில் ஒரு சில பிரச்சினைகளை இருப்பதாகவும் அதனை சரிசெய்ய சிறிது காலதாமதம் ஆகும் என்பதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் விஜய், விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து சென்னையில் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply