shadow

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த ரித்விகா: அதிகாரபூர்வமான தகவல்

விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் என்பவர் இயக்கி வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ரித்விகா இணைந்து உள்ளதாக இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

இந்த படத்தில் ஏற்கனவே மேகாஆகாஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் விஜய் சேதுபதி ஜோடியாக நடிப்பது மேகாஆகாஷ் அல்லது ரித்விகா என்பது படம் வெளிவந்த பின்னரே தெரியவரும்

மேலும் இந்த படத்தில் விவேக், இயக்குனர் மோகன்ராஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *