விஜய்சேதுபதியுடன் 7வது முறையாக இணைந்த காயத்ரி

விஜய்சேதுபதியுடன் 7வது முறையாக இணைந்த காயத்ரி

விஜய் சேதுபதியுடன்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் ஆகிய ஆறு படங்களில் நடித்த நடிகை காயத்ரி தற்போது 7வது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளார்,.

விஜய்சேதுபதி-சீனுராமசாமி இணையும் ஒரு படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் நாயகி காயத்ரிதான் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஒரு ஹீரோவுக்கு ஏழாவது முறையாக குறுகிய வருடங்களில் நடிக்கும் காயத்ரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படம் சீனுராமசாமியின் முந்தைய படம் போலவே ஒரு உணர்வுபூர்வமான குடும்பக்கதை என்று கூறப்படுகிறதூ.

 

Leave a Reply