விஜய்சேதுபதியால் தள்ளிப்போன ஜீவா படத்தின் ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதியால் தள்ளிப்போன ஜீவா படத்தின் ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் செய்யப்படுவது உறுதியாகியுள்ளதால் அதே தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த ஜீவாவின் ‘கொரில்லா’ திரைப்படம் ஜூலை 5க்கு மாற்றப்பட்டுள்ளது

இந்த தகவலை விஜய்சேதுபதியே தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கொரில்லா திரைப்படக்குழுவினர்களின் மாஸ்டர் பிளானின்படி இந்த படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது என்று விஜய்சேதுபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதே தேதியில் ‘தும்பா’ திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது

டான் சாண்டி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்

Leave a Reply