விஜய்க்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க நல்லதுதான்: திமுக பிரபலம்

விஜய்க்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க நல்லதுதான்: திமுக பிரபலம்

விஜய்க்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க அவருக்கு நல்லது தான் என திமுக பிரமுகரும் பட்டிமன்ற பேச்சாளருமான லியோனி தெரிவித்துள்ளார்

செய்தியாளர்களை நேற்று சந்தித்து விஜய் வீட்டில் ரெய்டு நடப்பது பற்றி கருத்துக் கூறிய போது லியோனி, ‘விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பது என்பது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையே. அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் யாரும் கேட்காமலேயே ’இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல’ என்று கூறி அவர் இது பழிவாங்கும் நடவடிக்கை தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்

விஜய்க்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க மேலும் அவருடைய படங்கள் நன்றாக ஓடும். பாஜகவுக்கு ஆதரவாக பேசிய ரஜினி வீட்டில் ரெய்டு ரத்து, அரசுக்கு எதிரான பேசிய விஜய் வீட்டில் வருமானத்துறை ரெய்டா? என கேள்வி எழுப்பிய லியோனி, விஜய் என்பவர் ஒரு கலைஞன், கலைஞனுக்கு ஜாதி மதம் எதுவுமே கிடையாது ஆனால் அவர் மீது ஒரு குறிப்பிட்ட மதத்தின் சாயத்தை பூச எச் ராஜா முயல்கிறார். ஜோசப் விஜய் என்று அவர் குறிப்பிடுவது இதற்கு உதாரணம் என்று லியோனி தெரிவித்தார்

Leave a Reply