விஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா? காயத்ரி ரகுராம்

விஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா? காயத்ரி ரகுராம்

விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருந்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த பல அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்காகவே இவ்வாறு சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடன இயக்குனரும், பிக்பாஸ் 1 போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து கூறியபோது, ‘தமிழ் திரைத்துறையில் மாஸ் நடிகராக இருப்பவர் விஜய். எப்போதும் அவரை குறிவைப்பது நல்லதல்ல. சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. விஜய்க்கு ஒருவேளை அரசியல் ஆசை வந்தாலும் அது தவறில்லை’ என்று கூறியுள்ளார்

 

Leave a Reply