shadow

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் நயன்தாரா பட இயக்குனர்

‘சாமி 2’ படத்தை அடுத்து விக்ரம் தற்போது கமல்ஹாசனின் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘மகாவீர் கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதக தகவல்கள் வந்துள்ளது. இவர் சமீபத்தில் வெளியான நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரமுடன் முதல்முறையாக இணையவுள்ள அஜய்ஞானமுத்து இயக்கும் இந்த படம் அவரது முந்தைய படங்கள் போலவே த்ரில் படமாக உருவாகவிருப்பதாகவும் இந்த படத்தில் பாடல்களே இல்லை என்றும் கூறப்படுகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *