வாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்

வாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்ற நிலையில் பதவிப்பிரமாணத்திலும் எம்பிக்கள் தங்கள் அரசியலை வெளிப்படுத்தினர்.

திமுக எம்பிக்கள் பதவியேற்கும்போதும் வாழ்க கலைஞர் , வாழ்க பெரியார் என்று கூறியும், அதிமுக எம்பி பதவியேற்கும்போது வாழ்க புரட்சி தலைவர் நாமம், வாழ்க புரட்சித்தலைவி நாமம், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்றும் கூறிய நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பதவியேற்கும்போது வாழ்க அம்பேத்கர், பெரியார் என கூறி பதவிப்பிரமாணம் செய்தார்.

அதேபோல் அவருடைய கட்சியின் ரவிகுமார் பதவியேற்கும்போது வெல்க தமிழ், வாழ்க அம்பேத்கர் என்றும் கூறி பதவியேற்று கொண்டார்

Leave a Reply