வாரணாசியில் 7 வகை கொரோனா: ஆய்வில் தகவல்

உபி மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் ஏழு வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிசிஎம்பி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஏழு வகைகளில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த டெல்டா மற்றும் பீட்டா வகை வைரஸ்களும் அடக்கம்

மேலும் வாரணாசியில் பரவியிருக்கும் 7 வகை கொரோனா குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வாரணாசி உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாரணாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.