வாசனை சுவை தெரியவில்லையா?

உங்களுக்கு கொரோனாவாக இருக்கலாம்: மத்திய சுகாதாரத்துறை

வாசனை மற்றும் சுவை தெரியவில்லை எனில் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காய்ச்சல் இருமல் தொண்டை வலி வயிற்றுப் போக்கு இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என ஏற்கனவே மத்திய அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவற்றில் தற்போது வாசனை மற்றும் சுவையையும் சேர்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே வாசனை மற்றும் சுவை தெரியவில்லை என்று உணர்பவர்கள் உடனடியாக தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

Leave a Reply