வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு அனுமதி இல்லை: சத்யபிரதா சாஹூ

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு அனுமதி இல்லை: சத்யபிரதா சாஹூ

ஏழு கட்டங்களாக பதிவான மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலைக்குள் கிட்டத்தட்ட முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்து செல்ல கூடாது என்றும், முகவர்கள் ஒரு முறை மையத்திலிருந்து வெளியே வந்துவிட்டால் மீண்டும் உள்ளே வர அனுமதி இல்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவை சேர்த்து மொத்தம் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட 1.16% அதிகம் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.