வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்படுமா?

ஆதார் எண்ணை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைத்துவிட்ட பின்னரும் இன்னும் வாக்காளர் அட்டையுடன் மட்டும் இணைக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதாருடன் இணைப்பு தொடர்பாக சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார் எண்ணுடன், வாக்காளர் விவரங்கள் இணைக்கப்படும் பட்சத்தில், போலி வாக்காளர்கள் களையப்படும் என்றும், கள்ள ஓட்டுகள் போடுவது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபர் ஒரு ஓட்டு மட்டுமே பதிஉ செய்ய வேண்டும் என்பதால் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது

Leave a Reply