தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை என்றும், நோய் தொற்று குறையாத காரணத்தால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பல மாநிலங்களில் நாளை முதல் கோவில்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை கோவில், ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட நாடெங்கிலும் உள்ள பல கோவில்கள் திறக்கப்படவுள்ளன. அதேபோல் சர்ச்சுகளும் மசூதிகளும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *