வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்: இட ஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர்

வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்: இட ஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர்

வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்றும், அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் 10% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ‘வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10% இடஒதிக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது என்று கூறினார்

மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply