வலைதளங்களில் போர் வேண்டாம்: நிஜப்போருக்கு நேரடியாக செல்லுங்கள்
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதட்டமான சூழ்நிலை இருந்து வரும் நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல் ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை உணர்ச்சிகரமாக பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆறு பேர்களில் ஒருவரான நினட் மண்டவ்கா மனைவி இதுகுறித்து கூறியதாவது:
, சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நிறைய நடக்கிறது. ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட்டாலும் சில நேரங்களில் அவ்வாறு இல்லை. நமக்கு போர் வேண்டாம். போரினால் ஏற்படும் இழப்புகள் குறித்து உங்களுக்கு தெரியாது. நாம் மேலும் நிறைய நினட் மண்டவ்கானை இழக்க வேண்டாம். வலைதளங்களில் போரிட்டு கொள்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு போர் வேண்டுமானால் நேரடியாக செல்லுங்கள்
வெறும் கோஷங்களை எழுப்பாதீர்கள். ஜிந்தாபாத் அல்லது முர்தாபாத் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்மையில் நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தால் பாதுகாப்பு படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்யுங்கள். அல்லது உங்கள் குடும்பத்தில் யாரையேனும் பாதுகாப்பு படையில் சேர்க்க ஊக்குவியுங்கள். அதுவும் செய்ய முடியவில்லை எனில், நாட்டிற்கு சின்ன சின்ன உதவிகள் செய்யுங்கள். அதாவது, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள். பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதீர்கள். பெண்களை துன்புறுத்தாதீர்கள். வகுப்புவாத வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள்
இவ்வாறு நினட் மண்டவ்கா மனைவி கூறியிருந்தார்.