வலிமை ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: அஜித் ரசிகர்களிடையே பரபரப்பு

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி தீபாவளிக்கு முந்திய வியாழன் அன்று இந்த படம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அஜித்தின் சென்டிமென்ட்படி வியாழன் அன்று படம் வெளியாக வேண்டும் என்பதால் வியாழக்கிழமை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதூ.

ஏற்கனவே அஜித்தின் படங்கள் பூஜை, படப்பிடிப்பு தொடக்கம், ரிலீஸ் உட்பட அனைத்துமே வியாழக்கிழமைதான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் எந்த கிழமைகளில் அஜித் படம் வெளியானாலும், படத்தை வெற்றி பெற செய்வோம் என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply