வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கி வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதன்படி காலநீட்டிப்பு செய்யப்பட்டதன் விவரங்களை தற்போது பார்ப்போம்:

தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி

நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி நவம்பர் 30

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் படிவம்-16 அளிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 15

நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 30-ஆம் தேதி

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி அக்டோபர் 30-ஆம் தேதி

திருத்தப்பட்ட வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி