வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய இணையதளம்: பழைய இணையதளம் ஜூன் 1 முதல் இயங்காது!

வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இணையதளம் ஜூன் 7ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது

மேலும் புதிய இணையதளத்திற்கு மாறும் பணிகளுக்காக தற்போது உள்ள பழைய இணையதளம் ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை மூடப்படும் என்றும் அந்த நாட்களில் இணையதளத்தை வரி செலுத்துபவர்கள் அல்லது வருமான வரித்துறை ஊழியர்கள் பயன்படுத்த முடியாது என்றும் வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தப்படும் புதிய இணையதளம் மற்றும் பழைய இணையதளத்தை தற்போது பார்ப்போம்.

புதிய இணையதளம்: www.incometaxgov.in

பழைய இணையதளம்: www.incometaxindiaefiling.gov.in