வருத்தத்துடன் வெளியேறினார் சுரேஷ்: ஆர்மிகள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுரேஷ் தான் வெளியேற்றப்பட்டார் என நேற்றே தெரிந்தாலும் சற்றுமுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியது உறுதி செய்யப்பட்டது

நான் தான் போவேன், நான் தான் போவேன் என்று சுரேஷ் அடிக்கடி சொல்லி கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் அவர் காப்பாற்றப்படுவார் என்றே நினைத்திருந்தார்.

ஆனால் கமல்ஹாசன் தன்னுடைய பெயரை கூறியதும் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டி கொள்ளாமல் மற்றவர்களையும் வருத்தப்பட வைக்காமல் அமைதியாக வெளியேறினார்

முதல் இரண்டு வாரத்தில் சுரேஷ் மிக அபாரமாக விளையாடிய நிலையில் நிச்சயம் அவர் கடைசி வரை இருக்கும் ஒரு போட்டியாளராகவே அனைவரும் கருதினர். எவிக்சன் டாஸ்க்கிற்கு பிறகு சுரேஷூக்கு ஆர்மியும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஆர்மியினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Reply