வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டாஸ்: காவல்துறை கடும் எச்சரிக்கை

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரிவாள், கத்தியுடன் வன்முறையில் நேற்று ஈடுபட்ட நிலையில், இதே போன்று தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தால் மாணவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் மாநகரப் பேருந்துக்குள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்திகளுடன் மோதிக் கொண்டனர். ஓட ஓட விரட்டி வெட்டியதில் வசந்த் என்ற 2ஆம் ஆண்டு மாணவர் படுகாயம் அடைந்தார்.

இச்சம்பவம் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. ரூட் தல பிரச்சனையே மோதலுக்குக் காரணம் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

மோதலில் ஈடுபட்ட குழுவினர் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவர் ஒருவரை அரைநிர்வாணமாக்கி சிலர் துன்புறுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பதற்றத்தை அதிகரித்தது.

ரூட் தொடர்பாக அந்த மாணவன் துன்புறுத்தப்பட்டதால், அரும்பாக்கம் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியா என்ற சந்தேகம் எழுந்தது.

Leave a Reply